விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பிக் பாஸ் 1 மற்றும் 3 சீனுக்கு ரசிகர்கள் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கவின். விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கவின். வெள்ளித்திரையில் நண்பேன்டா எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ரசிகர்கள். சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கும் கவின் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் சீஸனின் 3-வது போட்டியாளரும், நடிகருமான கவின் தன்னுடைய ஆதரவை சுரேஷ் சக்கரவர்த்திக்கு அளித்திருக்கிறார். சுரேஷ்-கேபி புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹார்ட் சிம்பல் அளித்து இருக்கிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இனிமே எங்களோட சப்போர்ட் அவருக்குத்தான் என தம்ப்ஸ் அப் காட்டி வருகின்றனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
— Kavin (@Kavin_m_0431) October 16, 2020