ஹரிஷ் கல்யாண் பட நாயகி பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்கிறார்.. எவ்வளவு சம்பளம் கேட்டார் தெரியுமா?..

விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளம் நடிகைகளுக்கு அழைப்புகள் சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவானி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நாயகியாக வலம் வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். பார்ப்பதற்கே கவர்ச்சியாக இருக்கும் இந்த இளம் நடிகையை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர விஜய் டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

 

அதுமட்டுமில்லாமல், அவர் ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டாராம். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டீம் ஷில்பா மஞ்சுநாத்தை அணுகி ரூ.1 கோடி கொடுத்து அவரை அழைத்ததாகவும் ஷில்பாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!