குட்டி குஷ்பு என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் ஹன்சிகா. தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா. தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் கொழுக்கு மொழுக்கு என இருப்பதால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்டார்.

ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஹன்சிகா. மேலும் தமிழில் விஜயுடன் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீய வேல செய்யனு குமாரு, சிங்கம் 2 என படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து தனது குழந்தைத்தனமான நடிப்பில் கலக்கியிருப்பார் ஹன்சிகா.
சமீப காலமாக ஹன்சிகாவுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை, ஆனால் இவர் கொழுக்கு மொழுக்கு என இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்பொழுது உடலை குறைத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து எலும்பும் தோலுமாக மாறிய பரிதாபம் என்று கலாய்த்து வருகின்றனர்.