ஸ்ரீதேவியா விஜயகுமாரா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். ரிக்ஷா மாமா படத்தை அடுத்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை அடுத்து காதல் வைரஸ், பிரியமான தோழி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

அதன் பின் தனுஷுக்கு ஜோடியாக தேவையை கண்டேன் படத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் தேவையை கண்டேன் படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் நடிக்கவில்லை. ஒருசில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவனம்செலுத்தி வந்த இவர் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது 33 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் குட்டையான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு வயதானாலும், நீங்கள் இன்றும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அனைத்து தகுதியும் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

There are so many beautiful reasons to be happy?

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!