சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் கடைசியில் கட்சி குறித்தும், அரசியல் குறித்தும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.
சமீபத்தில் படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ரஜினியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். மேலும் சமீபத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார்.
ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இக்காரணங்களால் அரசியலில் இருந்து பின் வாங்கினார் ரஜினி. மேலும் தற்போது அவர் மிகவும் முடியாத நிலையில் காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினியை இப்படி பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து உள்ளனர். இதோ அந்த வீடியோ..