கன்னட படங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ்யுடன் இணைந்து துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததில் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனைத் தொடர்ந்து பின்னர் விசில் என்ற திகில் படங்களில் நடித்தார். கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷிரின்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானவர் நடிகை ஷெரின். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 3யில் 3வது ரன்னர் அப் ஆவார். நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 மீது பிரபலங்களின் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இதில் அண்மையில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் தனது வலியை கூட பொருட்படுத்தாமல், கேபிரியலாவை தூக்கி கொண்டு இருந்தார் சுரேஷ் சக்ரவத்தி. இதனை பார்த்த ஷெரின், இந்த காட்சி என்ன அழ வைத்துவிட்டது என கூறி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.