ஷிவானி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து வெளியேறினார்.. அவருக்கு பதிலாக இந்த நடிகையா??அதிரிச்சியில் ரசிகர்கள்…

சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு தொடர் என்றால் அது இரட்டை ரோஜா தான். இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷிவானி. இரட்டை ரோஜா என்பது இரட்டை சகோதரிகளான அபிராமி மற்றும் அனுராதா பற்றிய ஒரு தமிழ் நாடகத் தொடர். இத்தொடரில் கதாநாயகன் அக்ஷய் கமல், பூவிலங்கு மோகன், சவிதா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்.

முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணியில் டாப் 5 யில் இருக்கும் டிவி ஜி தமிழ். இதில் ஒளிபரப்பப்படும் பல தொடர்களை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். யாரடி நீ மோகினி, செம்பருத்தி, சத்யா, இரட்டை ரோஜா என பல நல்ல தொடர்கள் உள்ளன. ஷிவானி இதற்கு முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பகல்நிலவு தொடரில் நடித்திருந்தார். மேலும் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்டிற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது இரட்டை ரோஜா தொடரில் தீடீர் என்று ஷிவானியை நிக்கியுள்ளனர். மேலும் இவருக்கு பதிலாக. சாந்தினி தமிழரசன் என்பவர் நடிக்க போகிறாராம். மேலும் இவர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த கவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!