தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரை வளம் வருபவர் தல அஜித். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அஜித் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். அஜித் தன்னுடன் சேர்ந்து நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில்தான் தல அஜித்துக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அஜித், ஷாலினி திருமணம் செய்வதற்கு முன்னரே தன்னுடன் நடித்த ஹீரா என்ற பெண்ணை காதலித்ததாக செய்திகள் வெளிவந்தன. நீண்ட நாட்களாக இருந்து வந்த அந்த காதல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தல அஜித் ஷாலினி, ஹீரா ஆகிய இருவருக்கும் முன்னரே பிரபல நடிகை ஒருவரை காதலித்து அவர் வீட்டுக்கு பொண்ணு கேட்டு சென்றதாக பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் ஜோடியாக நடித்தவர் தான் சுவாதி. அஜித்துக்கு பார்த்த உடனே சுவாதியை பிடித்துவிட்டதால் உ டனடியாக அவரது அம்மாவிடம் சென்று பொண்ணு கேட்டாராம். சுவாதியின் தாயார், சுவாதி பெரிய ஹீரோயினாக ஆகும்வரை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் இல்லை என தெரிவித்து விட்டதால் தல அஜித் தனது காதலை கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.