சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று ஆகிவிட்டார். பின்னர் குக்கு வித் கோமாளியில் வனிதாவை பார்த்த பலரும் பரவாயில்லை வனிதா மாறிட்டாங்கனு நினைத்தார்கள். இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
கடந்த ஜூன் 27ம் தேதி நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர். வனிதா என்னை போல தைரியமான பெண் இதுவரை பிறக்க வில்லை. என்னை யாரால் எதிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் யூடியூபில் கமெண்ட் பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோசமாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து வனிதாவை தொடர்புக்கொண்டு நம் தரப்பில் வனிதாவிடம் பேசிய போது அவர் செம்ம ரெய்ட் விட்டார். அதிலும், தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதோ அந்த வீடியோ…