வெளிவந்த பிரபல சீரியல் நடிகையின் முதல் கணவரின் புகைப்படம்!- அட இவர்தான் இவரின் முதல் கணவரா? ஆச்சர்யத்தில் சின்னதிரையினர்!

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ புதிய தொடரில் ப்ரஜன், பவானி ரெட்டி நடிக்கிறார்கள். இந்த சீரியலில் நடிகை பவானி வித்யாசமான நடிப்பில் நடிக்கிறார்.  வீரமும், பாசமும் நிறைந்த அம்மா – பிள்ளை. பெண்களை கண்டால் தூர ஓடுற கிராமத்து வெகுளி பையன் சின்னத்தம்பியை அந்தப் பகுதி பெண்கள் பலரும் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், பணக்கார திமிர் பிடித்த மாடர்ன் சிட்டி பெண் நந்தினி. ஆனால் நல்ல மனம் படைத்தவள். இப்படி முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும். இவர்கள் காதலர்கள் ஆவார்களா? இந்த இரு துருவங்கள் கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும்? என்பதே கதைக்களம் இவர் இதற்க்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார்

தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் அவரது நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை என தெரிவித்துள்ளார் பிரபல சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி.தனது கணவர் குறித்து அவர் கூறுகையில், ‘நானும் என் கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம், திருமணத்துக்கு பின்னரும் நண்பர்களாகத் தான் இருந்தோம்.

ஒருநாள் அவர் என்னுடன் இல்லை என தெரிந்ததும் அதிர்ந்து போனேன், கூடவே பழகி நேசித்த ஒருவர் உயிரோடு இல்லை என்பதை மனம் நம்பவே இல்லை.ஆனால் அவர் இறப்புக்கு நான் தான் காரணம் என மற்றவர்கள் கூறிய போது அதிகம் வலித்தது, நாங்கள் இருவரும் பாசமாக பழகினோம் என்பதை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும்.

இன்னும் அந்த வலியில் இருந்து மீளவில்லை, சில மாதங்களிலேயே நடிக்க வந்துவிட்டேன் என கூறுகிறார்கள், நடிப்பு என்னுடைய தொழில். பெற்றோர் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட விருப்பமில்லை, எனக்கு ஏற்ற கதை அமைந்ததால் வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.