வெளியான மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மாநகரம் மற்றும் கைதி எனும் இரண்டு வெற்றி படங்களை இயக்கி வெற்றி இயக்குனரானவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்யின் 64வது படம் ஆகும். மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார். தற்போது திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் என இதுவரை படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் இன்று (டிசம்பர் 29) 12.30 மணியளவில் வெளியாகும் என அறிவித்தனர். அதன்படி என்ன அப்டேட் என்றால் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது என அப்டேட் வெளியிட்டுள்ளனர். வெளியான புதிய அப்டேட்டால் கொண்டாட்டத்தில் இருக்கும் தளபதி விஜயின் ரசிகர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *