தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய். தற்போது இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம், கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. மேலும் திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் “தளபதி 65”.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பார். ஆனால் தற்போது இசையமைப்பாளர் அனிருத் அந்த பாடலை பாடி, லிரிக் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
We’re REALLY vibin’ to this track @anirudhofficial ???#YTFF2020 #YTFF2020isHERE pic.twitter.com/5dqVBd61oG
— YouTube FanFest #YTFF2020isHERE (@YouTubeFanFest) October 11, 2020