வெளியான நடிகர் ஜீவாவின் குடும்ப புகைப்படம்! மகன் உங்களை போலவே இருக்கிறார் என லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

பிரபல தயாரிப்பாளரின் வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இப்படி இவர் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் பல படங்களை தயாரித்து புகழ் பெற்ற ஆர். பி சௌத்ரியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி முதல் திரைப்படம் பெரிதாக ஒன்றும் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் திரைப்படம் இவருக்கும் மிகப்பெரிய வெற்றி கொடுத்து மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்பு கற்றது தமிழ், டிஷும் டிஷும், போன்ற திரைப்படங்கள் இவர் மிகச்சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்த கொண்ட இவருக்கு மூன்று வருடங்கலுக்கு பிறகு ஸ்பர்ஷா சௌதிரி எனும் மகன் பிறந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியின் பிறந்த நாளை கொண்டாடிய இவர் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகன் என்ன உங்களை போலவே இருக்கிறார் என லைக்குகளை குவித்து கமென்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *