வெளியான சூர்யாவின் வாடிவாசல் படத்தின் பேன் மேட் போஸ்டர்! அசந்துபோன ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். மேலும் இவர் நடிப்பின் நாயகன் என்றும் இவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில், பெரிய எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடிப்பில் சூரரை போற்று படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் அருவா என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்த சூர்யா, பின் சில காரணங்களால் அப்படம் நின்று போனது. இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் முதல்முறையாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல்.

இப்படம் சினிமா ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது ரசிகர் ஒருவர் வாடிவாசல் திரைப்படத்தின் பேன் மேட் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு அதிகாரப்பூர்வ போஸ்டர் போலவே அதனை கண்ட ரசிகர்கள் அசந்து போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.