வெளியான சூரரை போற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. சில மாதங்களுக்கு முன்பே வெளிவரவிருந்த சூர்யாவின் சூரரை போற்று படம் தற்போது வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் சூர்யா.

ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் பலருக்கும் இது வருத்தத்தை தந்திருந்தாலும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என சூர்யாவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது சூரரை போற்று படத்தின் டிரைலர் வரும் அக்டோம்பர் 15ஆம் தேதி வெளிவரவிருக்கிறது ரென தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.