வெளியானது சவுந்தர்யா விசாகனின் காதல் புகைப்படம்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தையடுத்து, தற்போது தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்கிறார். இவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர். இவர்களது திருமணம் இரண்டு நாட்களில் சென்னையில் நடைபெறவுள்ளது. 12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. சவுந்தர்யா விசாகன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என முக்கிய பிரபலங்களை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்து வரும் வேளையில் பிசியாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இன்னும் கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில்,

மணப்பெண் சவுந்தர்யாவும், மாப்பிள்ளை விசாகனும் முதன்முறையாக இணைந்து எடுத்த போட்டோ ஷூட்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புதுமண தம்பதிகளான இவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

கோயம்பத்தூர் மாப்பிள்ளை விசாகன், இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான அபேக்ஸ் லேபராட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.