பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 இளம் பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடியுள்ளனர். இவர்கள் வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள் இருவரும் நடனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பாராட்டியும், சிலர் தவறுதலான பரதநாட்டிய ஆட்டத்திற்கு விமர்ச்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.