வெளிநாட்டில் வேறு பெண்ணை மணந்து கொண்டு ஊருக்கு வந்த கணவன்: துடித்து போன மனைவி… அடுத்து நடந்த சம்பவம்

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் பாகிஸ்தான் நாட்டு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு ஊருக்கு திரும்பிய நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, 3 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கும் தாயம்மாள் (32) என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு காவியாஞ்சலி (13), கவிபாரதி (12), ஜெயபாரதி (7) என 3 மகள்கள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சண்முகவேல் கடந்த செப்டம்பரில் ஊருக்கு வந்தார்.

அப்போது பாகிஸ்தான் நாட்டு பெண்ணை திருமணம் செய்து உடன் அழைத்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயம்மாள் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த சண்முகவேல் அவரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கணவன், மாமனார், மாமியார், வெளிநாட்டு பெண் சேர்ந்து தாயம்மாளை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த தாயம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இதுகுறித்து பொலிசார் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த தாயம்மாள் நேற்று தனது 3 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் நடவடிக்கை எடுக்காத பொலிசாரை கண்டித்து, மகள்களுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து பொலிசார் அவரை காப்பாற்றி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.