வெளிநாட்டில் வாழும் நடிகை ரம்பா-வின் வியக்க வைத்த செயல்… தீயாய் பரவும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நாடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏழு மொழிகளில் பல படங்களில் நடித்தவர். இந்தியாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகை ரம்பா.

அதன்பின்னர் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வியப்பி ஆழ்த்தியுள்ளது. ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் செட்டிலானாலும் தமிழ் பாரம்பரியங்களை அவரின் குழந்தைகளுக்கு கற்று கொடுத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று அவரின் பெண் குழந்தைகள் இருவரும் விநாயகர் செய்து வழிபட்டுள்ளனர். இதனை அவரே காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *