வெளிநாட்டில் இருக்கும் அப்பாவுக்கு வீடியோகாலில் சோறு ஊட்டும் பிஞ்சு குழந்தை! க ண்ணை க ல ங் க வைக்கும் காட்சி

வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது பலரின் பெரும் கனவு. அப்படியே நல்ல வேலையும், கை நிறைய பணமும் கிடைத்தாலும் குடும்பத்தை மிஸ் செய்வது பெரும் துயரமான விசயம். இதோ இங்கேயும் அப்படித்தான். தனக்கு குழந்தை பிறந்து அந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாப்பாவைப் பார்க்க கிளம்பினார் ஒரு தந்தை. அந்த நேரத்தில் கொரோனா வந்து விமான சேவையே ரத்தானது. இதனால் தினமும் செல்போனில் வீடியோ காலில் மட்டுமே அப்பாவை பார்த்து வளர்ந்துகொண்டே இருந்தாள் செல்லக்குட்டி தேவதை. இதோ இப்போது தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை எழுந்து அமரத் துவங்கிவிட்டது. தானே எடுத்துச் சாப்பிடத் துவங்கிய தன் குழந்தையிடம் வீடியோகாலில் அப்பா வெளிநாட்டில் இருந்தவாறு ஆ..வென வாயைத் திறந்துகாட்ட குழந்தை ஊட்டிவிடுகிறது. வெளிநாட்டு வாழ்வின் துயரை இந்த வீடியோ அப்படியே கண்முன்பாக நிறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.