வீரம் படத்தில் நடித்த இந்த குழந்தையின் உண்மையான அம்மா இவங்கதானா!! வைரலாகும் புகைப்படம்

சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் என்ற படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் உண்மையான அம்மாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.சினிமா, சீரியல் என குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம்வருகின்றார். வெள்ளித்திரையில் நடிகை மீனா தொடங்கி, சின்னத்திரையில் நீலிமாவரை குழந்தை நட்சத்திரமாக இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்கள் தான்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரின் வரவேற்பை பெற்றவர்தான் யுவினா பார்த்தவி. வீரம் திரைப்படத்தில் கயழ்விழி என்னும் கதாபாத்திரத்திலும், மாஸ் படத்தில் சூர்யாவுக்கு மகளாக மேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

மேலும் ஸ்ட்ராவ்பெர்ரி படத்தில் குட்டி தேவதையாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் யுவினா. இதுபோக மஞ்சப்பை, கத்தி, மேகா, அரண்மனை, காக்கி சட்டை, சர்க்கார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் இந்த குட்டி தேவதை.

தற்போது 12 வயதாகும் இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை பெயர் மகேஷ். அவர் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யுவினா தன் அம்மாவோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.