வீட்டை இப்படியா மாத்துறது? கொரோனாவிற்கு பயந்து ஷாருக்கான் செய்த வேலைய பாருங்க… புகைப்படம் இதோ…

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நடிகர் ஷாருக்கான் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் ஏற்கனவே சில உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. இதனை அடுத்து அவரது குடும்பத்தருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது மகன் மற்றும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், திரையுலகமும் கொரோனா அச்சத்தில் மூழ்கியுள்ளது. நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில், ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.