வீட்டுத் தோட்டத்தில் நடமாடிய சிறுமியின் ஆவி: திகில் வீடியோ

தங்கள் வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் ஆவி ஒன்று நடமாடுவதை கெமராவில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் ஒரு பிரித்தானிய தம்பதியர். பிரித்தானியாவின் Lincolnshireஇல் கணவருடன் வசிக்கும் Amanda Papadopoulos (39) தோட்டத்தில் CCTV கெமரா ஒன்றை பொருத்தியுள்ளார். ஒரு நாள் கெமராவை நிறுவியுள்ள நிறுவனத்தில் இருந்து Amandaவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர்கள் Amandaவிடம், அவரது வீட்டின் பின்புறம் ஏதோ நடமாடுவதாக எச்சரித்துள்ளார்கள். கெமராவை பரிசோதித்த Amandaவும் அவரது கணவரும் அதில் யாரோ நடமாடுவது தெளிவாக தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது ஒரு சிறுமியைப்போல் உள்ளதாக தெரிவிக்கும் Amanda, தன்னால் இரண்டு மணி நேரம் ஓடும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாமல் பயந்து தன் கணவரிடமே விட்டு விட்டதாக தெரிவிக்கிறார். தாங்கள் தற்போது வசிக்கும் வீடு இருக்கும் பகுதியில் பழங்கால பள்ளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கும்

Amanda, அந்த பகுதியை தாங்கள் மாற்றி அமைத்தது பிடிக்காமல்தான் ஒரு மாணவி கோபமாக அப்பகுதியில் சுற்றுவதாக சந்தேகிக்கிறார்.அவர் அப்படிக் கூறுவதற்கு காரணம், இப்படி ஒரு காட்சி பதிவாகியுள்ளது.

இது முதல் முறை என்றாலும், இதற்கு முன் பல முறை, அணி வகுப்பு நடக்கும் சத்தத்தையும், மாணவர்களின் சத்தத்தையும் அவரும் அவரது கணவரும் பல முறை கேட்டிருப்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published.