வீட்டுக்குள் இப்படி ஒரு பிரம்மாண்டமா? வியக்க வைத்த குஷ்பு… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி

தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், அவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். அவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத் குமார், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், அம்பரீஷ், புலி பிரபாகர், ரவிச்சந்திரன், சுரேஷ் கோபி, சத்தியராஜ், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுந்தர் சியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவந்திகா மற்றும் ஆனந்திதா, பின்னர் அவர்கள் தங்கள் தயாரிப்பு இல்லத்திற்கு அவ்னி சினிமாக்ஸ் என்று பெயரிட்டனர்.

நடிகை குஷ்பு இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட காணொளியை பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர். வீட்டுக்குள்ளேயே குஷ்பு மிக பிரம்மாண்டமான பூந்தோட்டம் ஒன்றை ஊரடங்கு நேரத்தில் பராமரித்து வந்துள்ளார்.பார்க்கவே ரம்மியமாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர். குறித்த காட்சியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Those who wanted see my terrace garden.. here it is. #myparadise #myfaveplace ❤️❤️❤️

A post shared by Khush (@khushsundar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!