வீட்டின் மின்கட்டணத்தை குறைக்க இதை மட்டும் செய்யுங்க.. கரண்ட் பில் பாதியாகிடும்- டிப்ஸ் இதோ!

மின்சாரம் இல்லாத வீடுகளே இன்றைக்கு இல்லை. கரண்ட் இல்லாமல் நம்மவர்களால் அரைமணிநேரம் கூட இருக்கமுடியாது. இப்போதெல்லாம் மின்சாரம் போய்விட்டால் உடனே இன்வெர்டரை வைத்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு மின்சாரம் முக்கியமானதாக இருக்கிறது. இப்போது அண்மைக்காலமாக கரண்ட் பில் எகிறுவதாக பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். கரண்ட் பில்லைப் பொறுத்தவரை நூறு யூனிட் முற்றிலும் இலவசம் அதற்கு மேல் நாம் பயன்படுத்தும் யூனிட்களைப் பொறுத்து கட்டணம் வாங்குவார்கள்.

அதாவது 200 யூனிட், அதற்கு மேல், 500 யூனிட் வரை, அதற்கு மேல் என உதாரணமாகச் சொல்லலாம். கரண்ட் பில்லை மிச்சப்படுத்தும் சூப்பர் டிப்ஸ் இதோ.. முடிந்தவரை எ.இ.டி விளக்கைப் பயன்படுத்தவேண்டும். எந்த மின்சாதனப்பொருள் வாங்கினால் அதிக ஸ்டார் கொண்ட பொருள்களைத்தான் வாங்கவேண்டும். மின்விசிறிக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் பயன்படுத்தவேண்டும். வாசிங் மிஷினை அதன் முழுத்திறனுக்கான துணி இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிரிட்ஜ் கதவை அடிக்கடி திறக்கக் கூடாது.

ஒருமுறை திறக்கும்போதே தேவையான அனைத்தையும் எடுத்துவிட வேண்டும். அடிக்கடி திறந்துமூடுவது கரண்ட் பில்லை கூட்டும். இதேபோல் இண்டக்சன் ஸ்டவில் தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தினாலும் சீக்கிரம் சூடாகி மின்செலவைக் குறைக்கும். இதேபோல் வீட்டில் புது டிவி வாங்கினால் எல்.ஈ.டி அல்லது ஓ.எல்.ஈ.டி தொலைக்காட்சி வாங்கலாம். இதுவும் மின்கட்டணத்தை மிச்சப்படுத்தலாம். இதையெல்லாம் செஞ்சுப்பாருங்க. உங்க வீட்டில் கரண்ட் பில் பாதியாகிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!