வீடில்லை…! பிள்ளைகளின் சிகிச்சைக்கு பணமில்லை..!! வி ரக்தி யில் தாய் செய்த நெ ஞ்சை உருக்கும் செயல்.! என்ன செய்தார் தெரியுமா.?

இந்திய மாநிலம் கேரளாவில் தமது பிள்ளைகளின் சிகிச்சைக்காக உடல் உறுப்புகள் அனைத்தையும் விற்க தாம் தயாரென தாயார் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரே தமது ஐந்து பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்த அ திர்ச்சி முடிவை எடுத்துள்ளார். 

மேலும் சொந்தமாக குடியிருப்பு இல்லாத நிலையில், தமது பிள்ளைகளுடன் அவர் தற்போது தெருவில் போ ராட்ட த்தில் ஈடுபட்டு வருகிறார். கணவர் கைவிட்டு சென்ற நிலையில்,

தமது ஐந்து பிள்ளைகளின் சிகிச்சைக்காக போ ரா டி வருவதாகவும், பிள்ளைகளின் சிகிச்சைக்காகவே குடியிருப்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், வாடகைக்கு குடியிருந்த நிலையில், தற்போது வாடகை செலுத்தவும் வசதி இல்லை என்கிறார் சாந்தி. இதுவரை சிகிச்சைக்காக மட்டும் கடன் வாங்கியது 5 லட்சம் ரூபாய் என கூறும் சாந்தி, பொருளாதார ரீதியாக இதுவரை உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தமது பிள்ளைகளுக்காக இருதயம் வரை விற்க தாம் தயாராக இருப்பதாக சாந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதமான நிலையில், அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு சாந்தியும் குடும்பத்தையும் பா துகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். மட்டுமின்றி, சாந்தியின் கோரிக்கையை ஆய்வு செய்து போதிய உதவி செய்யப்படும் என எம்.எல்.ஏ ஒருவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.