விஷாலின் திருமணம் குறித்து உண்மையை உடைத்த லட்சுமி மேனன்! வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகா இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார் நடிகர் விஷால்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆன நிலையில் விஷால் திருமணம் பற்றி எந்த தகவலும் வெளியாகிவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனனிடம் தமிழ் சினிமாவில் இன்னும் யாருடன் நட்பில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, “எப்போதாவது விஷால்கிட்ட பேசுவேன்.

வேற யார்கூடவும் பெருசா பேசல என கூறினார் நடிகை லட்சுமி மேனன். விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்குச் சொன்னார்னா போவேன். அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.