விமான நிலையத்தில் கணவரை வழியனுப்ப வந்த மனைவியின் பி த் த லா ட்ட செயல்.. பெரும் ப ர ப ர ப்பை ஏற்படுத்திய ச ம் ப வ ம்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்து விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் என்பவரும், அவருடைய மனைவி சனா என்பவரும் பயணிகளுக்கான இ டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து இளம்பெண் சனா மட்டும் வெளியே வந்தார்.

இதை கவனித்த கேட்டில் நின்ற பாதுகாப்பு படை அதிகாரிகள், சனாவை நிறுத்தி விசாரித்த போது, தான் பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் எனது கணவர் மட்டுமே பயணிக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அதோடு உள்ளே போகும்போது கேட்டில் காட்டிவிட்டு சென்ற இ டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. இது பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், குறித்த பெண்ணை வெளியில் விடாமல் நிறுத்திவைத்து தீவிர வி.சாரணை நடத்தினர். அப்போது, நாங்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டோம்.

 

இந்த சூழ்நிலையில் எனது கணவர் சார்ஜாவிற்கு வேலைக்காகச் செல்ல தயாரானார். இதனால் அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமானநிலையம் வந்தேன். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கடைசி வரை சென்று கணவரை வழியனுப்ப வேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. இதனால், நான் எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ டிக்கெட் தயார் செய்து கொண்டு வந்தோம்.

 

அந்த போலி இ டிக்கெட்டை காட்டிதான் விமானநிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதன்பின்பு நானும் கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம். பின்பு அவர் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் ஷார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றார். நானும் அவரை வழியனுப்பி விட்டு அதே போலி இ டிக்கெட் மூலம் வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று அழுதுள்ளார். ஆனால் உயர் பாதுகாப்பு கொண்ட சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த மோ.சடி காரணமாக, இளம் பெண்ணை கைது செய்த பாதுகாப்புப் படை அதிகாரிகள், அவரை சென்னை விமானநிலைய பொலிசில் ஒப்படைத்தனர். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!