சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி Makdee என்ற ஹிந்தி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் 2014ல் ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். அதன் பிறகு வெளியில் வந்த அவர் தனக்கு பண தேவை இருந்ததால் வேறு வழி இன்றி விபச்சாரத்திற்கு ஒப்புக்கொண்டதாக நடிகையே வெளிப்படையாக கூறினார். இந்நிலையில் 2018 டிசம்பர் 13ல் அவருக்கு ரோஹித் மிட்டல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் வாழ்க்கை துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே அவர்கள் தற்போது பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.திருமணத்திற்கு முன்பு நான்கு வருடங்களாக காதலித்து வந்த அவர்கள், தற்போது பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.தற்போது நடிகர் நடிகைகள் அதிகம் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வருவது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.