சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது மக்களிடையே டிவி சீரியல்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று வாணி ராணி சீரியல். ராதிகா சரத்குமார் இதை தயாரித்து நடித்துள்ளார்.மேலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக வாணி ராணி உள்ளது.
வாணி ராணி சீரியலுக்கு தற்போது ஒரு கஷ்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் வாணி ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேசிங்கு மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.தற்போது மேலும் ஒரு சோகமான விஷயம் அரங்கேறியுள்ளது.
வாணி ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சங்கீத.இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல தமிழ் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரை பற்றிய ஒரு மோசமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
தற்போது நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம்.
இதனால் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு பலர் சிக்கியுள்ளார்கள். இதில் நடிகை சங்கீதா மேலும் சிலரை இதில் ஈடுபடுத்தியுள்ளாராம்.