விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் டாஸ்க்களும் உண்டு. இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும். இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதில் இறுதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக ஷிவாங்கி, புகழ், பாலா,மணிமேகலை போன்றோர் கலக்கி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் விஜே ரக்ஷன்.
பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் வரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே ரக்ஷன், அதன் பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். குறிப்பாக துல்கார் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இவர் இப்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னுடைய மனைவியின் குழந்தை பருவ புகைப்படம், நானும் அவளும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணைய வாசிகள் பலரும் கடும் ஷாக்கில் உள்ளனர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.