விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் நடிகர் சிவகார்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர் அந்த வரிசையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. ஒரு ஸ்டாண்டப் காமெடியனாக கலக்கப்போவது யாரு நிகஸ்க்ச்சியில் கலந்து கொணடார் நிஷா. இவர் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சின்னத்திரையில் தோன்றி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போதே நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அறந்தாங்கி நிஷா மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கினர்.
இந்நிலையில், அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மேக்கப்போட்டு கருப்பு நிறத்தில் இருந்த நிஷா வெள்ளை நிறத்தில் மாறியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பல கமெண்டஸ் கூறி நிஷா அக்கா இல்லையா?.. யாரு இவங்க என கிண்டலடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பரவி வருகிறது.