விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் முடிவுக்கு வந்தது..! வருத்தத்தில் ரசிகர்கள்

சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் என பல விஷயங்களை கூறி கொண்டே இருக்கலாம்.

இதில் அப்பா மற்றும் மகள் பாசத்தை கதைக்களமாக கொண்டு குடும்ப தொடராக எடுக்கப்பட்ட சீரியல் மௌன ராகம். இத்தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இதுவரை சுமார் 850 எபிசோடுகள் மற்றும் 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடி மக்களின் பேராதரவை பெற்றுள்ளது மௌனராகம். இந்நிலையில் இத்தொடர் இன்னும் சில நாட்களில் முடிவடைகிறது என தெரியவந்துள்ளது.

மேலும் மௌன ராகம் ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஆல்யா மானசா நடிக்கவும் ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகும் என்று தெரியவந்துள்ளது. மௌன ராகம் சீரியல் முடிவடைகிறது என்ற செய்தி அத்தொடரின் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றாலும், கூடிய விரைவில் மௌன ராகம் 2 வரும் என்று கூறப்படும் செய்தி அவர்களை எதிர்பார்ப்பில் காத்திருக்க செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.