விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பியை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் பரவும் போட்டோ..!

சின்னத்திரையில் தற்போது பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்லபோனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம்.

இந்த நிலையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றியடைவதற்கு என்னதான் அந்த நிகழ்ச்சியின் கதை மற்றும் போட்டியாளர்களின் பங்கு முக்கியமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தையும் வைத்துள்ளனர்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், அவருக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் பிரியங்கா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ரக்சா பந்தன் ஸ்பெஷலாக அவரின் தம்பி ரோஹித் தேஷ்பாண்டே உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக இவர்தான் பிரியங்காவின் தம்பியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.