விஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க!

சினிமா வேறு, தொலைக்காட்சி வேறு என்ற பிம்பம் கடந்த சில வருடங்களாக உடைந்து வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்தபிறகு பெரிய மாற்றமே நிகழத்தொடங்கியுள்ளது.

சினிமாவில் முன்னணியில் இருப்பவர்கள் கூட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறத்தொடங்கிவிட்டார்கள். அப்படி சூர்யா, கமல், விஷால் வரிசையில் விஜய் சேதுபதி நம்ம ஊரு ஹீரோக்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத்தொடங்கியுள்ளார்.

இதில் இந்த வாரம் இரண்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒருவர் தன் சொந்த பணத்தை செலவு செய்து மாணவர்களுக்காக கணினி வாங்கி ஸ்மார்ட்கிளாஸ் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்களாக மாற்றியுள்ளார்.

மற்றொருவர் யாரை பற்றி வகுப்பு எடுக்கிறாரோ அவரைப்போன்றே வேடமணிந்துவந்து வகுப்பு எடுத்து ரசிகர்கள் மனதில் எளிதாக புரியவைக்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு கூட ராஜா கெட்டப்பில் வந்து சங்ககால தமிழில் பேசி அசத்தியுள்ளார். இந்த நிஜ ஹீரோக்களை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.