விஜய் சேதுபதியுடன் படத்தில் நடிக்கும் அவரின் மகள்! எந்த படத்தில் தெரியுமா? வெளியான டிரெய்லர்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி படங்களுக்கென அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்துக்கு படம் இவர்காட்டும் புதுமையே இதற்கு காரணம். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இவருக்கு சூரியா சேதுபதி என்ற மகனும், ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர்.

இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார். அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் ஜூங்கா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதியின் மகளும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலேயே ஸ்ரீஜா அறிமுகமாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஸ்ரீஜா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *