விஜய் சங்கீதா திருமண கொண்டாட்டம்… தற்போது தீயாய் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் தான் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார். தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

கண்ணுக்குள் நிலவு படப்பிடிப்பு தளத்தில் விஜய், சங்கீதா தம்பதியினரின் மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜய், சங்கீதா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.தளபதியின் மகம் தற்போது கனடாவில் உள்ளார்.

விரைவில் விஜய், சங்கீதா தம்பதியின் திருமண நாள் வரவிருக்கும் நிலையில், கண்ணுக்குள் நிலவு பட ஷெட்டில் நடந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றது. அந்த புகைப்படத்தில் விஜய் சங்கீதா இருவரும் மாலை அணிந்திருக்கின்றனர். அவர்களுடன் இயக்குநர் ஃபாசில், நடிகை ஷாலினி, தாமு, சார்லி, உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!