2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு எனும் படத்தின் மூலம் ஒரு காமெடியனாக மற்றும் நடிகராகவும் அறிமுகமானவர் சூரி. வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.பிரபு தேவா, கீர்த்தி ரெட்டி, விவேக், சுஜாதா மற்றும் பலருடன் நினைவிருக்கும் வரை படத்தில் சூரி அறிமுகமாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆம் அப்படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரமும், இவருடைய நகைச்வை திறனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார் சூரி. தற்போது அதையும் தாண்டி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சூரி ஹீரோவாக களமிறங்குகிறார்.
சூரியை நாம் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் முதன் முறையாக அறிந்து கொண்டோம். ஆனால் அவர் அதற்கு முன்பே அஜித்தின் ரெட் மற்றும் ஜி, விக்ரமின் பீமா, ஜெயம் ரவியின் தீபாவளி, பரதின் காதல் என பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் ஒரு ஓரமாக நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..