விஜய்யின் பத்ரி படத்தில் நடித்துள்ள சிறுத்தை சிவா. இது வரை உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த காட்சி

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என மட்டுமில்லாமல் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சி றுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், வி வேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய பல படங்கள் அஜித்தை வைத்தது தான். இந்நிலையில் இயக்குனர் சிவா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆவதற்கு முன்னரே நடிகராக இருந்துள்ளார். தற்போது அவர் நடிகராக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆம், சிறுத்தை சிவா, இயக்குனர் ஆகும் முன் பல படங்களில் சிறு சிறு காட்சியில் நடித்துள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் பத்ரி படத்திலும் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியான பத்ரி திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் தனது அண்ணனுக்காக குத்துச்சண்டை வீ ரராக மாறியிருப்பார். மேலும் இந்த படத்தின் எண்ட் கார்ட்டில் நடிகர் விஜய், ஒருவரை தூக்கி கொண்டு ஓடுவர்.

அவரை இறக்கிவிட்டதும் விஜய்யின்பயிற்சயாளாரான ஷீகான் ஹூசைனி வேறு ஒரு நபரை கைக்காட்டி அவரை தூக்கிக்கொண்டு ஓட செல்லும்போது அவர் கையெடுத்துக் கும்பிடுவார்கள் அந்த காட்சியில் தோன்றியவர் தான் சிறுத்தை சிவா. மனதை தி ருடிவிட்டாய் படத்தில் சிறுத்தை சிவா சிறுத்தை சிவா இந்த படத்தில் மட்டுமல்ல நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் படத்தில் கூட நடித்து இருப்பார்.

தற்போது இயக்குனர் சிவா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *