விஜய்யின் துப்பாக்கி படத்தில் ஏன்தான் நடித்தேனோ என வருத்தபடும் பிரபல நடிகை…

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தளபதி விஜய், நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வெளியிட்டிருந்தார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். இந்தி, தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றிய திரைப்பட நடிகை அக்‌ஷர கவுடா. பிரியதர்ஷனின் ரங்ரெஸ் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தான் நடித்த கதாபாத்திரங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் என விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறினார். மேலும் காரணம், அந்த கேரக்டர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது மிகவும் மனநிறைவை தந்து மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக விஜய்யையும் அவரின் நடிப்பையும் கண்டு நான் மிரண்டு போனேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.