வாழை இலையில் காளான் பிரியாணியை ஒரு கை பார்த்த ராகுல் காந்தி.. அடுத்த வருடத்திற்கும் சேர்த்து செய்த ஆர்டர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவு பொருட்களை பெருமளவில் சமைக்கும் அவர்கள் அதை அருகிலுள்ள முதியோர், ஆதரவற்றோர் காப்பகத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த ராகுல்காந்தி அந்த கிராமத்திற்கு சென்று அந்த சமையல் கலைஞர்களை சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்காக பிரத்யேகமாக அவர்கள் தயாரித்த காளான் பிரியாணியை ஓலைப்பாயில் அமர்ந்து சகஜமாக சாப்பிட்ட ராகுல் காந்தி, காளான் பிரியாணி சுவையாக இருப்பதாகவும், அடுத்த முறை தான் வரும் போது ஈசல் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.