வானிலை மாற்றத்தால் அடித்த அதிர்ஷ்டம்! ஏழை மீனவரை கோடீஸ்வரன் ஆக்கிய திமிங்கலம்.. எல்லையற்ற மகிழ்ச்சியில் மீனவர்!

தாய்லாந்தின் சொங்க்ஹ்லா மாகாணத்தை சேர்ந்தவர் கேளீரம்சி மத்ஹபின். 20 வயதான இவர் மீனவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 6-ஆம் திகதி வானிலை மோசம் காரணமாக உடனடியாக தனது படகில் இருந்து கரைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடற்கரை மணலில் ஏதோ வெள்ளைக் கல் போன்று இவர் கண்ணில் பட்டுள்ளது. அதை உற்று பார்த்த போது, அது திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம், அதிர்ஷ்ட பொருளாக இருக்கலாம் என்று நினைத்து அருகில் சென்று பார்த்துள்ளார். அதன் பின் கிராமவாசிகளிடம் கேட்ட போது, அவர்கள் அதை அவர் நினைத்தது போன்றே கூறியுள்ளனர். அதாவது, அதை திமிங்கலத்தின் வாந்தி என்று கூறுவர்.

அதாவது நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும். வெளியே செல்லாது, இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும். மெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் அம்பேர்க்ரிஸ் என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும். இந்த அம்பேர்க்ரிஸ் (திமிங்கலத்தின் வாந்தி) ஆரம்பத்தில் துருநாற்றம் வீசும், அதன் பின் அது காய்ந்த பிறகு இனிமையான மற்றும் ஒரு நீண்டகால வாசனையை கொடுக்கும்.

மேலும், அவர் இப்போதைக்கு நான் இதை விற்கப்போவதில்லை, அவசரப்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், குறித்த மீனவர் இதை கிலோவுக்கு உள்ளூர் மதிப்பிற்கு 1,00,000 தாய் பாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளார். அப்படி பார்த்தா, இவருக்கு 7 கிலோ எடை கொண்ட அம்பேர்க்ரிஸ் கிடைத்திருப்பதாகவும், இது பிரித்தானியா மதிப்பில் கிலோவிற்கு 24,500 பவுண்ட் என்று கூறப்படுகிறது. தற்போது இவர் 210,000 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5,53,98,025 கோடி ரூபாய்)-க்கு விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.