வனிதாவிற்கு இவ்வளவு அழகிய மகனா! தற்போதைய நிலை என்ன தெரியுமா? ஹீரோ போலவே இருக்கிறார்!

வனிதா விஜயகுமார் ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றியுள்ளார். வனிதா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தில் பிரபலமடைந்தார். பல விமர்சனங்களைத் தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். மேலும் பல கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். பிக்பாஸ் வனிதாவின் முதல் மகனின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய மகன் இருப்பது யாருக்கும் தெரியாது. வனிதாவின் மகன் அவரின் தந்தையான நடிகர் விஜயகுமாரிடமே வளர்ந்து வருகின்றார்.

 

இந்நிலையில் வனிதா சில மாதங்களுக்கு முன் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் ஃபோட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது தனது அப்பாவை போல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது மகனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அச்சு அசல் தாத்தாவை போலவே இருப்பதாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.