வாட்ஸ் அப்பால் வந்த வினை… ராணுவத்தில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் கவுதமி தனது வீட்டில் சடலமாக கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் கவுதமி சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுப்பிடித்தனர். இதனிடையில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராஜேஷை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானது தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் தனது காதலி கலைவாணி (30) வீட்டில் பதுங்கியிருந்த ராஜேஷை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் கவுதமியை கொன்றதை ராஜேஷ் ஒப்பு கொண்டார். இதற்கு உறுதுணையாக இருந்த கலைவாணியும் கைது செய்யப்பட்டார். அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கலைவாணிக்கும் ராஜேஷுக்கு வாட்ஸ் அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணியை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராஜேஷிடம் இது குறித்து அறிந்த அவர் மனைவி கவுதமி சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜேஷ் மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.