வாகா எல்லை வந்தடைந்த தமிழன் அபிநந்தன்..வெளியான வீடியோ! ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகம்

பாகிஸ்தான் வசமிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரான இந்திய விமானி அபிநந்தன், வாகா எல்லை வந்தடைந்தார். இவரை வரவேற்க இந்தியா விமானப்படை துணை தலைவர்கள் இருவர் வருகை தந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அழைத்தனர். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் இன்னும் சில மணி நேரங்களில் விடுதலையாகவுள்ள நிலையில், அவரின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் பிற்பகல் 12 மணிக்கு வாகா எல்லையில் ஒப்படைக்கப்படவுள்ளார்.

லாகூரிலிருந்து சாலை வழியாக வரும் அபிநந்தனுக்கு உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவர் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை வரவேற்பதற்காக முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளனர். இதனால் பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருக்கிறார்.

இதனால் வாகா எல்லையில் பாதுக்காப்பு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்து அபிநந்தன் குடும்பத்தை சந்தித்த பின்னர், அதிகாரிகளுடான ராணுவ ஆலோசனைக்கு முதலில் அழைத்துச்செல்லப்படுவார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இந்தியாவிலும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்.

அத்துடன் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். அத்துடன் பாகிஸ்தானில் அவர் நடத்தப்பட்ட முழு விவரங்கள் கேட்கப்பட்டு, அது ராணுவக் குறிப்பில் பதிவு செய்யப்படும். அதன்படி, பின் வரும் காலங்களில் அது ராணுவ முறைகளாக பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று மதியம் அபிநந்தன் வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி சற்று முன்னர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!