வலிமை ராஜமௌலியுடம் போரிடுமா இல்லை நெட்டிசென்களிடம் சிக்கிக்கொண்டு போராடுமா..?

இயக்குனர் ராஜமௌலி சினிமா தளத்திற்கு வருவதற்கு முன்பு ஈனாடு என்னும் தொலைக்காட்சியில் சில தெலுங்கு தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார். இவர் முதல் முதலில் நான் ஈ படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார், இவர் இந்த படம் வாயிலாக அதிக பட்ஜெட்டையில் உருவாகிய படங்களையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டார் குறிப்பாக பாகுபலி, பாகுபலி 2 இந்த படம் வசூல்  ரீதியாக பெரும் சாதனையை படைத்தது.

நடிகர் அஜித்குமார் தென்னிந்திய முன்னணி நடிகர் ஆவார்,இவர் இப்பொழுது வலிமை என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் இந்த படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது,இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார் இதில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் கடந்த வாரம் சித் ஸ்ரீராம் பாடி வெளியான பாடல் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது

தற்போது அல்டிமேட் ஸ்டார் நடித்த வலிமை படமும் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய RRR படமும் அடுத்த மாதம் ஜனவரியில் இவை இரண்டும் வெவ்வேறு தேதிகளில் மோதவுள்ளன, இதற்கு முன் 2012 இல் பில்லா 2 திரைப்படமும் நான் ஈ படமும் மோதிக்கொண்டன இதில் நான் ஈ படம் வெற்றியும் பில்லா 2 படம் படுதோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது