தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். பப்ளிசிட்டியை விரும்பாதவர் எளிமையாக இருப்பதுடன் பட வேலைகள் போக விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு என கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை, விசுவாசம் என் இரண்டு வெற்றி படங்களில் நடித்திருந்தார் அஜித். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் உள்ளது.
இதனை மிகவும் தெளிவாக இயக்கியவர் வினோத். இப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் படத்தை இயக்கினார். அடுத்த படமும் அஜித்துடன் அவர் கமிட்டாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, ஆனால் சில பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இந்த நிலையில் தான் இப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் இசை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், இந்த படத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் ஒரு தீம் மியூசிக் ரெடி செய்துள்ளேன். இதுவரைக்கும் படத்திற்காக 3 பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டேன், ஒரு தீம் மியூசிக் முடிந்துள்ளது என கூறியுள்ளார்.