வலிமை படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறிய தகவல்! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தல படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். கடந்த வருடம் இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். யுவன் இசையில் அஜித்தின் மாஸ் நடிப்பு எனபதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் வலிமை படத்தை குறித்து கேள்வி எழுந்த போது ” வலிமை படம் செம்ம மாஸா இருக்கும் ” என கூறியுள்ளார். அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்த அஜித்தின் வெறித்தமான ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.