எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து, பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் காத்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து படக்குழு தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை உடனடியாக துவங்க முடிவெடுத்துள்ளாராம் அஜித். மேலும் படப்பிடிப்பை பொங்கல் பண்டிகைக்குள் முடித்துவிட்டு, 2021 தமிழ் புத்தாண்டிற்கு வலிமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் அஜித் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது கண்டிப்பாக தல அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தமிழ் புத்தாண்டு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.