வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது – பாத்தா நம்பவே முடியல? – வெளிவந்த புகைப்படங்கள்

நடிகர் சிவகர்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் வசூலில் சிறந்த படம் என்ற இடத்தையும் பிடித்த படம் வருத்த படாத வாலிபர் சங்கம் . இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக வெளியானது . இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் இமான் ஆவார். வசனங்கள் எழுதியவர் ராஜேஷ். இத்திரைப்படம் செப்டம்பர் 6, 2013ல் வெளியானது.

இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்ததிலேயே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவர் நடித்தவர் பெயர் ஷாலு சம்மு.இவர் பெயர் மலையாள பெயரை போல் உள்ளது அதனால் இவர் கேரளாவை சேர்ந்தவர் என்று நினைக்காதீர்கள் இவர் முழுக்க முழுக்க தமிழ் நாட்டை சேர்ந்தவர். நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது, மேலும் அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.

 

பிரபல நடிகைகளை போலவே தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடும் அவர் தற்போது மிகவும் மாடனான புகைப்படங்களை வெளியிட்டுள்ள்ளார். ட்விட்டரில் இவருக்கு கருப்பழகி என்ற பட்டமும் உள்ளது.தற்போது பொன்ராம் இயக்கி வரும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திலும் நடிக்கவுள்ளாராம் ஷாலுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *